விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

அஸ்வின் பேச்சால் தள்ளிப்போன படம் :

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், அஸ்வினின் ஆர்வக்கோளாறு பேச்சால் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்று படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டார்கள். இருப்பினும் கொரோனா பிரச்சனை காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தைரியமாக இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட்டு இருக்கின்றனர்.

படத்தின் கதை :

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான Fm ஸ்டேஷனின் Rjவாக பணியாற்றி வருகிறார் அஸ்வின் (Rj விக்ரம்). அவருக்கு தன் மனைவியாக வரப்போகும் நபரின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணை பார்க்கிறார். அவர் தான் அவந்திகா மிஸ்ரா (அஞ்சலி). எழுத்தாளராக இருக்கும் இவருக்கும் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து சில எதிர்பார்புகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமாக தனக்கு வரப் போகும் கணவருக்கு கண்டிப்பாக ஒரு முன்னாள் காதல் கதை இருக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

Advertisement

ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் முன்னாள் காதலியோ, காதல் கதையோ இல்லை. இருப்பினும் அவந்திகாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் அஸ்வின் தனக்கு முன்னாள் காதலி இருந்தார் என்று பொய் சொல்கிறார். மேலும், தன் முன்னாள் காதலி என்று தியேட்டர் நடிகையான தேஜு அஸ்வினியை (ப்ரீத்தி) அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார் அஸ்வின். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தேஜு மீதே காதலில் விழுகிறார் அஸ்வின். பின் அஸ்வினுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவர் யாரை திருமணம் செய்துகொண்டார் என்பதே இந்த படத்தின் மீதி கதை.

Advertisement

படத்தில் கடுப்பேற்றிய புகழ் :

இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதிதான கதை ஒன்றும் இல்லை வழக்கமாக அரைக்கப்பட்ட பழைய கதை தான். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி படு மொக்கை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சுதப்பி வைத்து இருக்கிறார் இயக்குனர். அஸ்வினின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இல்லை, அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார். குக்குவித் கோமாளியில் ஒர்க்கவுட்டான அஸ்வின் – புகழின் மாமா மச்சான் காம்போ படத்தில் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

இதுக்கும் தூங்கி இருக்கலாம் :

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி நிறைகள் இல்லை. புகழின் காமெடி டிவியில் பார்க்க மட்டுமே எடுபடும் என்பதற்கு சபாபதி படத்திற்கு பின் இந்த படமும் ஒரு உதாரணம். இப்படி படத்தில் விமர்சனம் செய்ய பல குறைகள் இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் பலர் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களை போட்டு வச்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக 40 கதையை கேட்டு தூங்கிய அஸ்வின் இந்த படத்திற்கும் தூங்கி இருக்கலாம் என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement