Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

எழுதியவர்subhashini27 ஜூலை, 2024 அன்று 10:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டின் 29 வாரத்தில் டாப் 10 இடத்தை பெற்றிருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 29 வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் சன் டிவி சீரியல் முதல் இடத்தை பிடித்து விடுகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக விஜய் டிவி தான் வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

சிறகடிக்க ஆசை:

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் 9.84 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

கயல்:

எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே முதல் இடத்தை பிடித்த ‘கயல்’ சீரியல் இந்த வாரம் 8.81 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 8.67 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ராதிகா சொன்ன பொய்யால் ஈஸ்வரி ஜெயிலில் இருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பின் வெளியில் வந்தார். இதை அடுத்து இனியா ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

சிங்கப்பெண்ணே சீரியல்:

அதேபோல் எப்போதுமே டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சன் டிவியின் ‘சிங்கப் பெண்ணே’ சீரியல் தற்போது 8.07 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்திற்கு வந்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த ஆனந்தி கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார். இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

மருமகள் சீரியல்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பட்டது. இந்த சீரியல் 8.05 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கேபி ஹீரோயினாகவும், ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர் ராகுல் ரவி ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

வானத்தைப்போல:

‘வானத்தைப் போல’ சீரியல் 7.35 புள்ளிகளுடன் இந்த வாரம் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் 7.30 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் ‘தெய்வமகள் சீரியல்’ நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் 7.24 புள்ளிகளை பெற்று எட்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

மல்லி:

சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் ‘மல்லி’. இந்த சீரியல் 6.92 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தை பிடித்திருக்கிறது.

சின்ன மருமகள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ சீரியல் 5.73 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரும் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

தலைப்புகள்
#TOp 10#Trp Ratings#Serial Trp#சீரியல் டிஆர்பி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement