போதை பொருட்கள் பற்றியும், பைக் திருட்டு பற்றியும் கத்துக்கிட்டேன். மூனு வேல சாப்டேன், நல்லா தூங்குனேன் – ஜெயில் அனுபவம் பகிர்ந்த TTF வாசன்.

0
576
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறை சென்ற TTF வாசன் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் ஒருவர் இனி பைக் ஓட்ட முடியாது என்பதால் இனி படத்தில் முழு கவனம் செலுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன் பைக்கும் ஓட்டுவேன் படத்திலும் நடிப்பேன். பேஷனை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர் உங்களுடைய ஓட்டுனர் உரிமை தான் ரத்து செய்து விட்டார்களே அப்போது எப்படி பைக் ஓட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த ttf வாசன் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், மேல்முறையீடு ஏதாவது செய்யலாம், என்னுடைய கை போனதை விட லைசென்ஸ் போனது தான் கண் கலங்கி விட்டேன் என்று கூறி இருந்தார். TTF வாசன் மீண்டும் பைக் ஓட்டுவார் என்று சொன்னதால் இதனால் TTF வாசன் கன்னிஸ்கள் குஷியானார்கள். இப்படி ஒரு நிலையில் உள்நாட்டில் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும் விபத்து ஏற்படுத்தியதற்காக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டவர் சர்வதேச லைசன்ஸ் இருப்பதை காட்டி இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் பைக் ஓட்ட முடியாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜாமினில் வெளியே வந்த வாசன், முதன் முறையாக தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அவர் ‘சிறையில் நான் பெரிதாக கஷ்டப்படவில்லை. எனக்கு அங்கே இருந்தவர்கள் உதவி செய்தார்கள். மேலும் நான் சிறையில் இருந்த நாட்களில் தான் நான் மூன்று வேளை நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்கினேன். இதற்கு முன்பெல்லாம் நான் இப்படி இருந்தது கிடையாது.

எப்போதும் வேலை வேலை என்று சரியாக சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் பத்திரிகையாளர்களிடம் இனி நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கி வெளிநாட்டில் தான் பைக் ஓட்டுவேன் என்று சொன்னேன் அதற்கான வேலைகளை விரைவில் நான் துவஙகுகுவேன்.

-விளம்பரம்-

மேலும் சிறையில் எனக்கு ஏகப்பட்ட புதுப்புது நபர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக அங்கே உள்ளே வந்தவர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வந்தவர்கள் தான். அவர்கள் மூலம்தான் போதை பொருட்களில் எத்தனை வகைகள் இருக்கிறதா என்பதை நான் தெரிந்து கொண்டேன். எனவே, போதை பொருளுக்கு எல்லாம் யாரும் அடிமையாகி விடாதீர்கள்.

அதேபோல உள்ளே சில போதைப் பொருட்களால் பைக்கில் ஈடுபட்டு உள்ளே வந்தவர்களும் இருந்தார்கள். அவர்களிடம் இருக்கும் நிறை குறைகள் என்ன என்பதை நான் கற்றுக் கொண்டேன். அதன் மூலம் நான் துவங்கியிருக்கும் டிடிஎஃப் பிட் ஷாப்பில் அறிமுகம் செய்ய இருந்த bike theft alarm ஐ மேம்படுத்த சில யோசனைகளும் கிடைத்திருக்கிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வரும். மேலும் ,சிறை அனுபவம் குறித்து கூடிய விரைவில் நான் வீடியோ வெளியிடுகிறேன். டிடிஎப்பிற்கு என்றும் அழிவு கிடையாது இன்று பேசியுள்ளார் டிடிஎஃப் வாசல்

Advertisement