பைக், கார் எதுவுமே இல்லை. எங்கேயும் வெளியே போக முடியவில்லை – புலம்பி தள்ளிய TTF வாசன்

0
127
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் உள்ள ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு கொடுத்து உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறி விட்டார். தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கு வழிவகை செய்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றார்கள். இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தில் இவருடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

டிடிஎப் வாசன் வீடியோ:

இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீதி வண்டி ஓட்டியதால் வாசன் விபத்தில் சிக்கி இருந்தார். இதனால் இவருக்கு நிறைய அடிபட்டது. இதனால் இவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இவர் தொடங்கியிருக்கும் youtube சேனலில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். இப்பொழுது சென்னை கிளம்பி விட்டேன். வண்டி கூடவே இருந்து விட்டு அது இல்லாமல் இருக்கிற நிலைமை யாருக்குமே வரக்கூடாது. முன்னாடி பைக் இருந்தது எங்க போக வேண்டும் என்றாலும் போவேன். விபத்து ஆனதில் பைக்கில் போக முடியவில்லை.

-விளம்பரம்-

கார்-பைக் குறித்து சொன்னது:

காரில் டிராவல் பண்ணனும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதற்காக புதிதாக கார் ஒன்று வாங்கினோம். கார் இப்போ கொஞ்சம் மாற்றக் கொடுத்திருக்கிறோம். பைக், கார் எதுவுமே இல்லை. எங்கேயும் வெளியே போக முடியவில்லை. சென்னை போயிட்டு கொஞ்சம் பொருள் வாங்க வேண்டிய வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு கோவா போகலாம் என்று ஒரு பிளான் பண்ணி இருக்கிறேன் என்று கூறி தன்னுடைய வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் எல்லாம் காண்பித்து இருக்கிறார்.

டிடிஎப் வாசன் புது கடை:

அதனை அடுத்து இவர் சென்னை வந்து வர்மக்கலை வைத்தியரை சந்தித்து இருப்பது தொடர்பாகவும் வீடியோ பதிவில் இருந்தார். பின் தன் பைக் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடையை திறக்க இருப்பது தொடர்பாகவும் அந்த கடைக்கு டிடிஎஃப் பிட் ஷாப் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது அதற்கான வேலைகளில் தான் வாசன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement