தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்..! நெகிழ்ந்த ஊர் மக்கள்.! விஜய் சொன்னது இதுதான்

0
1913
vijay-thuthukudi

கடந்த  22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் பெண்கள், பள்ளி மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர செயலை கண்டித்து மக்களும் பல்வேறு சினிமா துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

vijay

- Advertisement -

இந்நிலையில் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து தங்களது ஆறுதலை ஏற்கனவே தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

நேற்று இரவு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் நடிகர் விஜய். அப்போது தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயுரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களது குடும்பத்தாருக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

-விளம்பரம்-

நேற்று இரவு தனது ரசிகர்களுடன் இரு சக்கர வாகனங்களில் சென்ற விஜய், போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து தனது ஆறுதலையும் கூறினார். மேலும் நேரம் கடந்து வந்தமைக்கு, தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இந்த நேரத்தில் வந்திருப்பதால் தன்னை தவறாக நினைக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ijay thuthukudi

actor

மேலும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியபோது தன்னை புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம்”தயவு செய்து புகைப்படம் எடுக்க வேண்டாம்” என்று நடிகர் விஜய் வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இதுகுறித்து போராட்டத்தில் பாதிக்கபட்ட ஒரு நபர் கூறுகையில்”நேற்று இரவு எங்கள் வீட்டிற்கு வந்திருந்த விஜய் , எங்களின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டார். எங்களிடம் மிக எளிமையாக நடந்து கொண்ட விஜய் ”நேரம் கடந்து வந்ததற்கு மன்னித்து விடுங்கள் ‘ என்று பெருந்தன்மையுடன் கூறினார் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement