சேலம் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் சிறுமி நேத்ரா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

இதை அடுத்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது.
இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல்:
அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக விஜய் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் விஜய் நடத்தி இருந்தார். வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருக்கிறார். அதோடு இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.
https://www.youtube.com/shorts/1RzY3xnpVdQ
சேலத்தில் பேசிய சிறுமி:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலருமே கலந்து கொண்டு பேசி இருந்தார்கள். அப்போது இந்த விழா மேடையில் அனல் பறக்க சிறுமி நேத்ரா பேசி இருந்தார். அவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேத்ரா குறித்த தகவல்:
மேலும், இந்த சிறுமிக்கு பெயர் வைத்ததே தளபதி விஜய் தானாம். அதைப்பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதாவது, தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றங்களும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் சேலம் விஜய் மக்கள் இயக்க தலைவர் பொண்ணுக்கு தளபதி விஜய் தான் பெயர் வைத்து இருந்தார்.

பெயர் வைத்த விஜய்:
சேலம் விஜய் மக்கள் இயக்க தலைவர் பார்த்திபன். விஜய்யின் ஜில்லா படத்தில் கூட நடித்துள்ளார். இவரின் பொண்ணுக்கு விஜய் அவர்கள் தான் தேன் ஊட்டி ‘நேத்ரா’ என்று பெயர் வைத்தார். இந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது விஜய் அவர்கள் தங்க செயினையும் பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி இருந்தது. தற்போது அந்த சிறுமி தான் வளர்ந்து தவெக மேடையில் தெறிக்க விட்டு இருக்கிறார்.






