ஆண்டு நிறைவடைந்தாலே டாப் 10 என்ற பட்டியில் நிச்சயம் துவங்கிவிடும். 2020ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்கள், நடிகர்கள், நடிகைகளின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது (இந்த பட்டியில் இந்த அளவில் மட்டும் ). கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை.
https://twitter.com/TwitterIndia/status/1338346797706539008
இருப்பினும் ஒருசில படங்கள் OTT தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ட்விட்டரில் பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலோ, படத்தின் அப்டேட், அவர்களின் பிறந்தநாள், லேட்டஸ்ட் போட்டோ என்று எது வந்தாலும் ரசிகர்கள் ஹேஷ் டேக்குகளை போட்டு ட்ரெண்டு செய்வது வழக்கம். அந்த வகையில் ட்விட்டரில் இந்த ஆண்டு அதிகம் ட்வீட் செய்யபட்ட பிரபலங்கள், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்கள் எவை என்பதை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் இளைய தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வரும் வக்கீல் சாப் 2வது இடத்திலும், அஜித்தின் வலிமை 3வது இடத்திலும், சர்காரு வாரி பாட்டா 4வது இடத்திலும், சூரரைப் போற்று 5வது இடத்திலும், தர்பார் 10வது இடத்திலும் உள்ளது. அதே போல இந்த ஆண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலில் மகேஷ் பாபு முதல் இடம் பிடித்துளளார்.
https://twitter.com/TwitterIndia/status/1338345645833244674
இந்த லிஸ்டில், பவன் கல்யாண் இரண்டாவது இடத்திலும், விஜய் 3வது இடத்திலும், ஜூனியர் என்டிஆர் 4வது இடத்திலும், சூர்யா 5வது இடத்திலும், அல்லு அர்ஜுன் 6வது இடத்திலும், ராம் சரண் 7வது இடத்திலும், தனுஷ் 8வது இடத்திலும், மோகன்லால் 9வது இடத்திலும், சிரஞ்சீவி 10வது இடத்திலும் உள்ளனர். அதே போல இந்த ஆண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவரை தொடர்ந்து இந்த லிஸ்டில் காஜல் அகர்வால் 2வது இடத்திலும், சமந்தா 3வது இடத்திலும், ரஷ்மிகா மந்தனா 4வது இடத்திலும், பூஜா ஹெக்டே 5வது இடத்திலும், டாப்ஸி 6வது இடத்திலும், தமன்னா 7வது இடத்திலும், ரகுல் ப்ரீத் சிங் 8வது இடத்திலும், ஸ்ருதி ஹாசன் 9வது இடத்திலும், த்ரிஷா 10வது இடத்திலும் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர், நடிகைகள் பட்டியலில் அஜித் மற்றும் நயன்தாராவின் பெயர் இடம் பெறவில்லை என்பது வருத்தமான விஷயம். அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





