தனுஷின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம், அதிர்ச்சியில் ரசிகர்கள் – இது தான் பின்னணி

0
733
dhanush
- Advertisement -

தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்:

இந்நிலையில் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பொதுவாக ட்விட்டர் நிறுவனம் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக்கை வழங்கி வருகிறது. இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். மேலும், இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த டிக் கிடைப்பது கிடையாது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி இருக்கிறது.

ப்ளூ டிக் நீக்க காரணம்:

பொதுவாக ஆக்டிவாக இல்லாத அக்கவுண்ட்கள் மற்றும் அக்கவுண்டில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படும். ஆனால், தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எந்த காரணத்தையும் இதுவரை டுவிட்டர் நிறுவனம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு தோனியின் அக்கவுண்டில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்ட பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டது. அரசியல் பிரபலம் மற்றும் நடிகை குஷ்புவின் ப்ளூ டிக் இதேபோல் நீக்கப்பட்ட பின்பு வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தற்போது தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பின்பு சிறிது நேரத்திலேயே ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்காய் தனுசுக்கு வழங்கி விட்டது.

Advertisement