எந்த தவறும் செய்யாமல் மாட்ட இருந்த ஆர்யா - ஈழப் பெண் பண மோசடி புகாரில் புதிய திருப்பம். இருவர் கைது.

By Rajkumar · 24/8/2021

நடிகர் ஆர்யா மீது ஈழப் பெண் பண மோசடி புகார் அளித்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் ஆர்யா மீது கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்ததோடு தன்னிடம் பெற்ற பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருக்கிறார் என்றும் அந்த பெண் புகார் அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : பில்லா நயந்தாரா ரேஞ்சுக்கு மாறிய ரஷிதா - இப்படி ஒரு மாடர்ன் உடையில் பாத்திருக்கீங்களா ?

இப்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் அடிப்படியில், ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அந்த பெண் யார் என்றே தெரியாது என்றும், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் இந்த வழக்கில் முழு ஒத்துழைப்பையும் தருகிறேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

behindtalkies AMP · Quick view
View full