பில்லா நயந்தாரா ரேஞ்சுக்கு மாறிய ரஷிதா – இப்படி ஒரு மாடர்ன் உடையில் பாத்திருக்கீங்களா ?

0
23144
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா.

-விளம்பரம்-

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு ‘ என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 5 வில் கலந்துகொள்ளப் போகும் டிக் டாக் பிரபலம் – அப்போ, செமயா இருக்க போது போங்க.

- Advertisement -

சரவணன் மீனாட்சி தொடருக்காக நடிகை ரஷிதா சிறந்த நடிகை என்ற விருதை பல முறை பெற்றுள்ளார். அந்த வகையில் எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசி இருந்தார் ரஷிதா.ஆனால், அதன் பின்னர் விஜய் டிவியின் ஒரு தொடரில் கூட இவரை காண முடியவில்லை.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் மூலம் ரீ – என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது இவர் கன்னடம் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் செம மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர் பில்லா நயன்னு நெனச்சிட்டோம்னு கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement