உதயநிதி – கிருத்திகாவா இது – திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார்கள் பாருங்க.

0
960
Udhay
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் உதயநிதி சமீபத்தில் தான் இந்த படத்தின் அறிவிப்பு கூட வெளியானது. உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா வேறு யாரும் கிடையாது தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்து வந்தவர் தான் கிருத்திகா.

கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இதில் இன்பநிதி கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் தான் இவர் பிரபல கால்பந்து கிளப்பில் சேர்ந்து விளையாடி இருந்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் இவர் சமீபத்தில் பெண் தோழியுடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-
2

இந்த நிலையில் உதயநிதி மற்றும் கிருத்திகாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவு இருக்கிறார் உதயநிதி. தற்போது சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏவாக இருக்கும் உதயநிதி மாமன்னன், ஏன்ஜல் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல இந்த படங்களுக்கு பின்னர் இனி படங்களில் தான் நடிக்கப்போவது இல்லை என்று அறிவித்து இருந்தார். ,

Advertisement