உதயநிதியை துணி இல்லாமால் போட்டோஷூட் பண்ணினேன் என்று மிஸ்கின் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Advertisement

இதையும் பாருங்க : 17 வயதில் கல்யாணம் பண்ணேன், அவர் வீட்டுக்கு சென்ற பின் தான் நான் 4வது மனைவின்னு சொன்னார் – பேபி அஞ்சு வாழ்க்கையில் நடந்த சோகம்.

மிஸ்கின் திரைப்பயணம்:

மேலும், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பிசாசு. கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.

Advertisement

பிசாசு 2 படம்:

முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Advertisement

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் மிஸ்கின் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் உதயநிதி குறித்து கூறியிருந்தது, ஒரு முறை கிருத்திகா அவர்கள் என்னை சந்தித்து உதயநிதியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். பின் நான் உதயநிதியை வைத்து ஆடை இல்லாமல் போட்டோ சூட் நடத்தினேன். எனக்கு என்னென்ன எல்லாம் கற்பனைக்கு வந்ததோ அந்த அளவிற்கு போட்டோ சூட் நடத்தினேன். அதற்குப் பிறகுதான் நான் யுத்தம் செய் படத்தின் கதையை எழுத தொடங்கினேன்.

உதயநிதி குறித்து சொன்னது:

அதற்கு உதயநிதி தான் பொருத்தமாக இருப்பார் என்று கதை எழுதி முடித்து உதயிடம் கதையை கூறியவுடன் அவர் என்னால் இதில் நடிக்க முடியாது, இவ்வளவு கொலைகளா என்று சொல்லிவிட்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்கு பிறகு தான் சேரனை வைத்து இந்த படத்தை எடுத்தோம். தற்போது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்க்கும் போது நான் எழுதிய கதை மாதிரியே படம் இருந்தது. ஆனால், அவர் அதில் நடிக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது.பின் சைக்கோ படம் பற்றி பேசி இருந்தோம். சைக்கோ படத்தில் உதய் யுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம் என்று கூறி இருந்தார்.

Advertisement