தனது கடைசி படத்தை வெற்றிப்படமாக மாற்றிய மாரி செல்வராஜூக்கு சொகுசு காரை பரிசளித்த உதயநிதி.

0
1653
- Advertisement -

தனது கடைசி படத்தை வெற்றிப்படமாக மாற்றிய மாரி செல்வராஜூக்கு உதயநிதி சொகுசு காரை பரிசளித்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நான்கு படங்களை தயாரித்தார்.

-விளம்பரம்-

பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி. இவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கண்ணை நம்பாதே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

இதனை அடுத்து தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாமன்னன். இந்த படத்தை
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த தகவல்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

உதயநிதி அளித்த பரிசு:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து முதல்வர் மு க ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்தநிலையில் மாரி செல்வராஜுக்கு சொகுசு காரை உதயநிதி பரிசு அளித்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

சொகுசு காரின் விலை:

இதனால் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கிய நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர். இந்த காரின் விலை 50 லட்சம் என்று கூறப்படுகிறது.

Advertisement