உலகத்தை கொரோன தாக்கியதில் இருந்து சமீப காலமாக அதிக ஓடிடி தொடர்கள் வந்த வன்னமாறு இருக்கிறது. அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பெற்றுருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கதைக்களம் :

இந்த கதையில் நடப்பவை 90களில் நடக்குமாறு காட்டப்படுகிறது, பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை.

Advertisement

90 காலகட்ட கதை :

இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் மீதி கதை. தற்போது உள்ள சூழ்நிலையிலேயே இவ்வள்வு கட்டுப்பாடுகளும் மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கும் நேரத்தில் 1990ஸ் காலங்களில் இந்த நிலையில் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக கதையாக்கி இருக்கிறார் இயக்குனர்.

நல்ல வரவேற்பு :

இந்த தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரமான தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ மூட நம்பிக்கைகளை தாண்டி வெற்றி பெறுவது, சில இடங்களில் ரத்ததை “இங்க்” என்றால் நம்புகிறார்கள் முட்டாள்கள் என்ற வசனம் எல்லாம் பட்டாயா கிளப்பி இருந்தது.கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் பதிவு :

இந்த இனைய தொடரை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தான் தமிழ் நாட்டு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி தற்போது இந்த படத்தை பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஓன்று போட்டுள்ளார். அந்த பதிவில் ‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை.

Advertisement

குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட படத்தை கொடுத்ததற்கு இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement