நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக இன்று காலை 9.10 மணிக்கு பொறுப்பேற்றார் மு க ஸ்டாலின். . தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

கடந்த (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது.இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.

இதையும் பாருங்க : முத்துவேல் கருணாநிதி எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின். கண்கலங்கிய துர்கா ஸ்டாலின். வைரலாகும் வீடியோ.

Advertisement

இந்நிலையில், மே 5 -ம் தேதிகாலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏ-க்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்., அதே போல அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், அமைச்சரவை பட்டியல் நேற்று (மே 6) வெளியிடப்பட்டது.

இதில்  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இருப்பினும் இன்று நடைபெற்ற பதவிஏற்பு விழாவில் உதயநிதி பங்கேற்றார். அவர் அணிந்து வந்த முககவசத்தில் “நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்” என அச்சிடப்பட்டு இருந்தது. முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு க ஸ்டாலின் சமீபத்தில் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘”நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்” என்று பயோவில் மாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement