பாதியில் நின்று போய்யுள்ள கமல் படம், மீண்டும் கைகொடுக்கும் உதயநிதி. உற்சாகத்தில் ரசிகர்கள். எந்த படம் தெரியுமா ?

0
389
kamal
- Advertisement -

கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்க இருக்கிறது என்று உதயநிதி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், நடிகர் சித்தார்த் அவர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து:

பின் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், இந்த படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள்.

நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படம்:

அதுமட்டும் இல்லாமல் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டுக் கொண்டே இருந்தது. இதனால் லைக்கா நிறுவனத்துக்கும், சங்கருக்கும் இடையே மோதல் உருவானது. பிறகு ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படமும் எடுக்கக்கூடாது என்று சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்திருந்தது லைக்கா நிறுவனம்.

-விளம்பரம்-

விக்ரம் படம்:

இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிற படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அதோடு கமலஹாசன் விக்ரம் படத்தில் பிஸியாக இருந்தார். சமீபத்தில் தான் விக்ரம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 படம் மீண்டும் தயாராகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 பட வேலை ஆரம்பம்:

விக்ரம் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியன்2 நிச்சயம் எடுக்கப்படும் என்று கமல் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் ஆந்திராவில் பங்கேற்ற நிகழ்ச்சியில் சங்கர் தெலுங்கு படத்தை முடித்த பின் இந்தியன் 2 வேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட உதயநிதி கூறியது, கடந்த சில தினங்களாக லைக்கா நிறுவனம் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் ஆரம்பிக்கப் போகிறோம் என்று அறிவித்திருந்தா

Advertisement