பெரியார் குறித்து வசனத்தால் சந்தானத்தின் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. சந்தானம் நடித்த டிக்கிலோனா பட இயக்குனர்  கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

அந்த ட்ரைலரில் ‘நேர்ல பாக்கல’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து செய்யும் வார்த்தை வித்தை தொடக்கத்தில் படம் நகைச்சுவைக்கான கியாரன்டி கொடுப்பதை உறுதி செய்கிறது. ‘சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ’ என்ற வசனம் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. குறிப்பாக பெரியாரை குறிப்பிட்டு இந்த வசனம் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்ட பலரும் சந்தானத்தை திட்டி தீர்த்து வந்தனர். சந்தானம் இந்த பதிவை நீக்கினாலும் இதனுடைய ஸ்க்ரீன் ஷாட் தற்போதும் வைரலாகி வருகிறது. இதனால் சந்தானத்தை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் பெரியாரை தொடர்ந்து கிண்டலடிக்கும் விதமாக பேசியதால் உதயநிதி கோபமடைந்ததாகவும், அதன் காரணமாகவே அவரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வடக்குப்பட்டி ராமசாமி படக்குழு வெளியிட்ட போஸ்டரில் ரெட் ஜெயண்ட் பெயர் இடம்பெறவில்லை.

Advertisement

அதற்கு பதிலாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் வடக்குப்பட்டி ராம்சாமி திரைப்படத்தில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியேறி உள்ளது உறுதியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதவும் வெளியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க உதயநிதியும் சந்தானமும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.

Advertisement

சொல்லப்போனால் உதயநிதி ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த படங்களில் சந்தானம் ஒரு முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். ஆனால், பெரியார் குறித்து சந்தானம் தொடர்ந்து கேலி செய்யும் வகையில் பேசி வந்ததால் தான் உதயநிதி இந்த படத்தை கைவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement