‘என் கண்ணை மூடினால்’ – சேதுராமன் பிறந்தநாளில் அவரது மனைவி போட்ட உருக்கமான பதிவு.

0
392
- Advertisement -

தங்கள் திருமண நாளில் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

- Advertisement -

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

உமாவிற்கு பிறந்த சேது :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தத. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. இந்த நிலையில் இன்று சேதுராமனின் பிறந்தநாளில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் உமா.

பிறந்த நாள் பதிவு :

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எந்த உணர்வுகளையும் பிடித்துக் கொண்டதற்காக இத்தனை ஆண்டுகளாக குற்ற உணர்ச்சியை உணர எனக்கு ஒரு காரணமும் இல்லை. உன்னிடம் என்னை வெளிப்படுத்த நீங்கள் எப்போதும் வசதியாக இருந்தீர்கள்… கண்களை மூடும்போது உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்… நினைவுகளில் மூழ்கியிருக்கிறேன். இனிய நினைவுகள் மட்டுமே…. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement