பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையான இவர் 1978 இல் மும்பையில் பிறந்தார். பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ,சுனில் ஷெட்டி போன்ற முன்னணி ஹரோகளுடன் நடித்தவர். அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்கமுடியவில்லை.
பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் நிஷா சின்னத்திரைக்கு தாவினர். இவர் 2013 இல் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் 2 ஆம் பரிசையும் வென்றார் நிஷா.அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற 47 வயதாகும் அர்மீன் கோலியை காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளியாகின.பின்னர் இவர்கள் இருவரும் 2014 இல் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இன்னும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் என்டெர்ட்டைன்மன்ட் ஈ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் நான் இன்னும் இருக்கிறேன் என்று அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்கி உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதில் என்ன விடயம் என்றால் தற்போது இவருக்கு 40 வயதாகிறது, இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




