சிகரெட் புடிக்க தெரியலனு கத்தனாங்க. ஆனால், நான் – வீடியோவை வெளியிட்ட நடிகை.

0
2468
urvashi
- Advertisement -

ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சிங் ஷாப் தி கிரேட்’. இந்த படத்தினை இயக்குநர் அணில் ஷர்மா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இது தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம்.இதனைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அங்கு ‘Mr. ஐராவதா’ என்ற படத்தில் நடித்தார்.

Urvashi Rautela Looks Smoking Hot in Backless White Dress, Picture ...

- Advertisement -

ஏ.பி. அர்ஜுன் இயக்கிய அந்த படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருந்தார். அதன் பிறகு கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிற்கு வரவில்லை. அவரின் கால்ஷீட் டைரியில் அடுத்தடுத்து குவிந்தது ஹிந்தி படங்கள் மட்டுமே.ஹிந்தியில் ‘சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4’ ஆகிய படங்களில் நடித்தார் ஊர்வசி ரவுத்தேலா.

இதுமட்டுமின்றி, ‘பாக் ஜானி, காபில்’ ஆகிய இரண்டு ஹிந்தி படங்களிலும் மற்றும் ‘பாரோபைசின்’ என்ற பெங்காலி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

-விளம்பரம்-

இவரது சமூக வலைதள பதிவுக்கென்றே ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, படத்தில் தான் நடித்த புகைபிடிக்கும் காட்சியின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு புகைபிடிக்க தெரியவில்லை என்று பலரும் கத்தி கொண்டு இருந்தனர். ஆனால், நான் வெறும் 5 நொடியில் அதனை கற்றுக்கொண்டு செய்தேன்.

Advertisement