தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வடசென்னை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் ராஜன் தாதா கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருப்பார். அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பார்.

இந்நிலையில் வடசென்னை படத்தின் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. படத்தில் ராஜனுக்கு வைத்து அதே காட்சிகளை அன்பு வைத்திருந்தார் வெற்றிமாறன். அந்த காட்சி புகைப்படம் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இத்தனை காட்சிகளும் கவனித்து உள்ளீர்களா? தற்போது இதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். சினிமா உலகில் தனுஷ் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

Advertisement

கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த “பட்டாஸ்” படம் வேற லெவல் மாஸ் காட்டியது. தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”. இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் அவர்கள் இந்தியில் ஒரு புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement
Advertisement