மயானம் வரை சென்ற Kpy பிரபலங்கள் – அடக்கம் செய்யப்பட்ட வடிவேல் பாலாஜியின் உடல். நெஞ்சை குலைக்கும் வீடியோ.

0
2754
balaji
- Advertisement -

மாரடைப்பு காரணமாக செப்டம்பர் 10-ஆம் தேதி உயிரிழந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜியின் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

🔴RIP Vadivel Balaji Last Respect |வடிவேல் பாலாஜியின் இருதி தருணம்…

News 1 TAMIL ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 11, 2020

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.. வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

- Advertisement -

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் நேற்று (செப்டம்பர் 10) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பாலாஜியின் உடல் சேத்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அவரின் உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் வடிவேல் பாலாஜியிடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் வடிவேல் பாலாஜியின் உடல் மயானத்தில் புதைக்கப்பட்டது வரை உடன் இருந்தனர். கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் வடிவேல் பாலாஜியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement