தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவருக்கும் ஏற்பட்ட மோதல் நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் நடிகர் வடிவேலு சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் வடிவேலு, தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து .

வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம்,

Advertisement

புலிகேசி பிரச்சனையால் வடிவேலு சினிமாவில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடுப் சேனல் ஒன்றில் நடிகர் சிங்கமுத்து பங்கேற்று பேசி இருந்தார். அந்த வீடியோவை நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் மனோ பாலா பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் தன்னை பற்றி பல தவறான செய்திகளை கூறியுள்ளதாக வடிவேலு குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விடீயோவினால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது என்றும், ஏற்கனவே சிங்க முத்துவிற்கும் தனக்கு ஒரு வழக்கு நீதி மன்றத்தில் போய்க்கொண்டு இருக்கிறது என்றும் கூறியுள்ள வடிவேலு. தன்னை பற்றி தரை குறைவாக பேசிய சிங்கமுத்து மீதும் மனோ பாலா மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வடிவேலு அளித்த புகாரில் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement