அட, வடிவேலுக்கு இத்தனை பேர பசங்களா, அதுவும் ஒரு Twins - வடிவேலுவின் மகன் அளித்துள்ள முதல் பேட்டியின் வீடியோ.

By Rajkumar · 17/9/2021

தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். இருந்தாலும் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத இணையதளமே இல்லை.

அந்த அளவிற்கு வடிவேலுவின் காமெடியை அடிப்படையாக வைத்தே மீம்ஸ் போட்டு வந்தவர்கள். சமீபத்தில் தான் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனையடுத்து தற்போது வடிவேலு அவர்கள் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். இந்நிலையில் வடிவேலு அவர்களின் மகன், மகள் குறித்து எந்த விஷயமே அதிகமாக பலருக்கும் தெரியாது.

இதையும் பாருங்க : பெண் ஆடை சுதந்திரம் பற்றிய வசனம் - வெற்றிமாறன் வீடியோவை போட்டு சாந்தானத்தை வெளுத்து வாங்கிய சின்மயி.

மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களை வைத்து திருமணம் நடத்தினார். சுப்ரமணிக்கு பார்த்த பெண் புவனேஸ்வரி.மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி மகள். அந்த வகையில் தற்போது வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=5ts0vNAB82Y

அதில் அவர் கூறியது, எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளார்கள். முதலில் ஒரு பெரிய பையன். இரண் டாவது ட்வின்ஸ் ஒரு பையன், ஒரு பொண்ணு மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களுக்கு எல்லாம் என் அப்பா வடிவேலு தான் பெயர் வைத்தார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கு. ஆனால், இப்ப இல்லை கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக படத்தில் நடிப்பேன். அப்ப நிறைய சொல்லுவார் சினிமாவில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்காக நிறைய கடின உழைப்பு வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டிருக்கிறேன். நல்ல இயக்குனர், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full