பெண் ஆடை சுதந்திரம் பற்றிய வசனம் – வெற்றிமாறன் வீடியோவை போட்டு சாந்தானத்தை வெளுத்து வாங்கிய சின்மயி.

0
15491
chinmayi
- Advertisement -

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் என்றாலே படங்களில் மற்றவர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது, கலாய்ப்பது தான் ட்ரேட் மார்க். ஆனால், இந்த படத்தில் சந்தானத்தின் சில வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் நடிகர் சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக வசனத்தை பேசி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் பாருங்க : ரஜினியை நடந்து போக சொன்ன தயாரிப்பாளர் இவர் தான் – அந்த படத்தின் இயக்குனரே கூறியுள்ள வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி சந்தானம் பேசிய வசனமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகியிடம் சந்தானம் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறுவார். அப்போது நாயகி அரை குறை ஆடை அணிந்து சந்தானம் முன் வந்து நிற்பார்.

This image has an empty alt attribute; its file name is 1-126.jpg

அப்போது சந்தானம் என்ன ட்ரெஸ் இது என்று கேட்க, அதற்கு நாயகி ‘இது ஆடை சுதந்திரம் இதில் நீ தலையிடாதே ‘ என்று சொல்வார். அதற்கு சந்தானம் ‘உனக்கு ஏத்தா மாதிரி வாழ்றது சுதந்திரம் இல்ல, நீ வாழ்றத மற்றவங்க ஏத்துக்கறது தான் சுதந்திரம், கொஞ்சம் இழுத்தா அவுந்துரும் இதுக்கு பேர் சுதந்திரமா’ என்று கூறுவார்.

-விளம்பரம்-

தற்போது இந்த வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பெண்கள் ஆடை குறித்து வெற்றிமாறனிடம் கேட்கப்பட்ட போது அவர் அதற்க்கு சொன்ன பதிலின் வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் பகிர்ந்து ‘டிக்கிலோனா’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்த இயக்குனரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-127.jpg

இப்படி ஒட்டு நிலையில் வெற்றிமாறன் பேசிய இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, கொஞ்சம் இழுத்தா வேஷ்டி அவுந்துரும்தரும்,இப்படி சொன்னாள் என்ன நடக்கும் ? சுதந்திரம் என்பது தனக்கே உரித்த ஒன்று ஆனால், நாம் வளர வளர அதற்கான அர்த்தம் மாறிவிடுகிறது. மற்றவர்கள் ஏற்றுக் கொள்வது போல வாழ்வது நிச்சயம் ஒரு தோல்வி தான்.

இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் கூட அவர் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வது போல ஒரு வேலை கிடைக்கவில்லையே. படத்தில் கூறியுள்ள இந்த வசனத்தை நிச்சயம் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன் அதேபோல ரசிகர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த வசனத்தில் எனக்கு மிகப்பெரிய கேள்வியாக இருப்பது, ஏன் ஒருவரின் ஆடையை பிடித்து இழுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement