மேயதா மான் நடிகர் வைபவின் அழகான மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா.!

0
3569
Meyadha-Maan
- Advertisement -

நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர். இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ். 

- Advertisement -

அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வைபவ். தற்போது காட்டேரி, ஆர் கே நகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. மேலும், வைபவ் ரெட்டியின் மனைவி தொகுப்பாளினி ரம்யா மற்றும் அட்லீ மனைவி ப்ரியாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement