பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்ட்ட வைரமுத்து. குஷியில் சின்மயி போட்ட ட்வீட்.

0
38550
Chinmayi-vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்புமிக்க கதைகளையும் மல்டி ஸ்டார் கொண்டு படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவனாக மணிரத்னம் தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல கவிஞர் வைரமுத்துதான் பாடல்களை எழுதுவதாக இருந்தது இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வைரமுத்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த விஷயம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே பிரபல பாடகியான சின்மயி தான். தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : மடியில் சாய்த்து லிப் லாக் கிஸ் கொடுத்த ஷாலு ஷம்மு. வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சின்மை இன்னமும் தைரியமாக வெளியே சொல்ல முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்களுக்கும் இது சமர்ப்பணம் என்பது போல சின்மையின் தோழி ஒருவர் பகிர்ந்த டீவீட்ட்ற்கு கமன்ட் தெரிவித்துளளார். மேலும் பாடகி சின்மயி தான் மணிரத்தினத்தின் மனைவியை நேரில் சந்தித்து வைரமுத்து குறித்துப் பேசி மணிரத்னத்தை இந்த படத்தில் இருந்து நீக்கியது அதுவும் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது

-விளம்பரம்-
Advertisement