உரிமையில் தான் எடுத்து கொள்கிறார்கள், இதற்கு பிரச்சனையா? இளையராஜாவை வம்பிழுத்த வைரமுத்து

0
254
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து துவங்கி இருக்கிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. மேலும், இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாக இளையராஜா இசை காப்புரிமை குறித்த சர்ச்சை இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, இளையராஜா உடைய பாடல்களை எக்கோ அண்ட் அகி ஆகிய பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை எக்கோ, அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -

இளையராஜா குறித்த சர்ச்சை:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் உடைய தீர்ப்பு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஓத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இளையராஜா-மஞ்சுமோல் பாய்ஸ் சர்ச்சை:

இப்படி இருக்கும் நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தி இருப்பதால் அந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டு இருக்கிறார். இதற்கு படத்தினுடைய தயாரிப்பாளர், குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலுக்கு அந்த படத்தினுடைய தயாரிப்பாளரிடம் உரிய முறையில் அனுமதி பெற்று தான் பயன்படுத்தி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வைரமுத்து பேட்டி:

இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பேட்டியில் வைரமுத்து, நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பாடல் உடைய தலைப்புகள் எல்லாம் என்னை நேரில் பார்த்தோ, தொலைபேசியில் கேட்டோ பயன்படுத்தியது கிடையாது. அனைவருமே வைரமுத்து நமக்கானவன், தமிழ் நமக்கானது, ஏன் கேட்க வேண்டும் என்ற உரிமையில் தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

வைரமுத்து-இளையராஜா குறித்த சர்ச்சை:

ஏற்கனவே இசைப் பெரிதா? பாடல் பெரிதா? என்ற சர்ச்சையில் இளையராஜாவை வம்பிழுத்து வைரமுத்து பேசியதாக சோசியல் மீடியாவில் விவாதம் கிளம்பியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் இளையராஜாவின் பாடல் காப்புரிமை தொடர்பாக அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement