படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுக்க பணம் கேட்ட யூடுயூப் விமர்சகர் – ஓப்பனாக சொன்ன யோகிபாபு

0
398
- Advertisement -

நடிகர் யோகி பாபுவை மோசமாக விமர்சித்து வலைப்பேச்சு குழுவினர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அந்த வகை வகையில் யூடியூப் சேனலில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக நிற்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான யூடியூப் சேனலில் ஒன்று தான் வலைப்பேச்சு.

-விளம்பரம்-

இதில் அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகியோர் குழுவாக சேர்ந்து பிரபலங்கள், படங்கள், கிசுகிசுக்கள் என தினமும் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் யோகிபாபுவை விமர்சித்து பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் யோகி பாபு, பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சில், நடிகர்களை மோசமாக விமர்சித்து பேசுகிறார்கள். இல்லாத விஷயத்தையும் இருக்கு என்பது போல சொல்கிறார்கள்.

- Advertisement -

யோகி பாபு வீடியோ:

என்னைப் பற்றி கூட ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். அதற்கு நான், ஏன் இப்படி பேசுகிறீர்கள்? நீங்களும் மீடியாவில் தானே இருக்கிறீர்கள்? ஒருவரைப் பற்றி இல்லாத விஷயத்தை இருப்பது போல் பேசலாமா என்று கேட்டதற்கு, எங்களை கவனித்தால் நாங்கள் எதற்கு பேசப் போகிறோம் என்று கைகுலுக்கி பணத்தை கேட்கிறார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இவர்களுக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

வலைப்பேச்சு வீடியோ:

இதை அடுத்து வலைப்பேச்சு குழுவினர், நாங்கள் யோகி பாபுவிடம் பணம் கேட்டதாக பேட்டியில் சொல்லி இருந்தார். உண்மையிலேயே நாங்கள் அவரிடம் பணம் எதுவும் கேட்கவில்லை,வாங்கவும் இல்லை. அவர்கள் தான் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல எதார்த்தமாக பேசி இருக்கிறார்கள். யோகி பாபு மிகப்பெரிய திருத்தணி முருகர் பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அவரிடம் காசு வாங்கி இருந்தால் திருத்தணி கோவிலில் வந்து சத்தியம் செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

யோகி பாபு குறித்து சொன்னது:

நானும் முருகன் மீது அதிக பக்தி கொண்டவன் தான். நாங்களும் சத்தியம் செய்கிறோம். உங்களுக்கு ஒரு நாளில் இலட்சக்கணக்கில் நஷ்டம் ஆகிறது என்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு வாருங்கள். வரும்போது உங்கள் குழந்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தையின் மீது சத்தியம் அடித்து சொல்லுங்கள், நானும் என் குழந்தை மீது சத்தியம் அடித்து சொல்கிறேன். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. நாங்கள் அப்படி பேசவும் இல்லை. உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் கூட வெளியிடுங்கள். இல்லாத ஒன்றை இருப்பது போல் திணிக்கக்கூடாது.

யோகி பாபாவுக்கு விட்ட சவால்:

இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சொல்வதை தான் நாங்கள் சொல்கிறோமே தவிர உங்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்கள் சொன்ன விஷயத்தை தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம். சினிமா கோபுரத்தில் எவ்வளவு பேர் பிரபலமாக இருக்கிறார்கள். சில சமயம் சினிமா கோபுரத்தில் குப்பைகளுமே ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் யோகி பாபுவும் ஒட்டி கொண்டு இருக்கிறார். அவர் ஒரு குப்பை என்று மோசமாக விமர்சித்து பேசியிருக்கிறார்கள்.

Advertisement