விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் மாஸ்டர் வசூலை பின்னுக்குத் தள்ளிய வலிமை.

0
521
Valimai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் முதல் நாள் வசூல்:

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 6.9 லட்சம் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

-விளம்பரம்-

வலிமை படம் செய்த சாதனை:

மேலும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 3.65 லட்சம் தான் வசூல் செய்தது. ஆனால், தற்போது வலிமை படம் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அதிக விஜய் ரசிகர்கள் கொண்ட இடத்திலேயே தல அஜித்தின் படம் வசூல் சாதனை செய்து இருப்பது வேற லெவல் என்று பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

ஏ கே 61 படம் பற்றிய தகவல்:

மேலும், வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத்குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement