அப்டேட் கேட்டு மோடி வரை சென்ற அஜித் ரசிகர்கள். தமிழில் வணக்கம் சொல்லி அப்டேட் சொன்ன போனி கபூர்.
தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.
https://twitter.com/BoneyKapoor/status/1361238693198069763
இதை தொடர்ந்து 'வலிமை' பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 15 ஆம் தேதி நிறைவடைகிறது எனவும், ஓரிரு காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : பாலாவுடன் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய ஷிவானி - கூட இவங்க வேற.
ஆனால் படம் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட்எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/ThalaAjith_FC/status/1361132952478908417
இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அதில் ''வணக்கம் வலிமை படத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பால் நான் நெகிழ்ந்துள்ளோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட வேலை செய்து கொண்டு இருக்கிறோம் இது ஒரு சுவாரசியமான படம் என்று குறிப்பிட்டு #Valimai #valimaiupdate #Ajithkumar போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டுள்ளார்.