பாலாவுடன் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய ஷிவானி – கூட இவங்க வேற.

0
23118
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி – முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி – பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இதையும் பாருங்க : மோடிக்கு எதிராக ட்வீட் ? சர்ச்சையில் சிக்கிய சிவாங்கி பதிரிபோய் கொடுத்த விளக்கம்.

- Advertisement -

பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜிடம் ஷிவானி மீது காதலா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாலாஜி, பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒருநாள், காலையில எழுந்ததும் நான் சோகமா அமர்ந்துகொண்டு இருந்தேன். அப்போது அங்கே இருந்த யாருமே என்கிட்ட வந்து என்ன ஏதுன்னு கேக்கலை. ஷிவானிதான் வந்து அக்கறையா பேசினாங்க. அந்த அக்கறை எனக்குப் பிடிச்சிருந்தது. ஷிவானி போலவே கேபியும் என்மீது பாசமாத்தான் இருந்தாங்க. ஆனா, அவங்ககிட்ட பழகறப்ப ஒரு தங்கச்சி ஃபீல் இருந்தது.

ஆனா, ஷிவானியிடம் பழகறப்ப தங்கச்சி ஃபீல் எனக்கு வரலை. அவ்ளோதான் சொல்வேன். மத்தபடி கன்டென்டுக்காக ஷிவானி கூடப் பழகுனேங்கிறதெல்லாம் என்னைப் பத்தி எதிர்மறையா பேசறவங்க சொல்றது” என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலா, ஷிவானி, சம்யுக்தா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகிய 6 பேரும் நேற்று காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், பாலா கேக் வெட்டிவிட்டு முரட்டு சிங்கிள் டே என்று கூறினார் பாலா.

-விளம்பரம்-
Advertisement