ட்விட்டரில் சாதனை படைத்த ‘வலிமை’ என்ற தலைப்பை அஜித்துக்காக விட்டுகொடுத்தது யார் தெரியுமா ?

0
6252
valimai
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் நம்ம தல ‘அஜித்குமார்’. அதுமட்டும் இல்லைங்க தல என்று சொன்னாலே போதும் ஒரு தனி ரசிகர் படையே சேர்ந்து விடும். இயக்குனர் வினோத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்,தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதுமட்டும் இல்லைங்க இந்த படம் வசூல் ராஜாவாக திகழ்ந்தது.மேலும், அஜீத் குமார் நடிப்பில் ‘தல 60’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என இணையங்களில் தெரிவித்தார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்து உள்ளார்கள். அதோடு யுவன், நீரவ் ஷா இவர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Image

இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாகஇருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். மேலும்,இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த தல 60 என்ற படத்தின் பெயரை “வலிமை” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதோடு, முதலில் ‘வலிமை’ என்ற படத்தின் பெயர் உரிமையாளர் கென்யா பிலிம்ஸ் அவர்கள் வைத்திருந்தார்கள். பின்னர் தான் இயக்குனர் வினோத் குமார் கென்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமார் இடம் கேட்டார். மேலும், அவர் நம்ம தல அஜித்தின் தீவிர ரசிகராம். அதனால், எதுவுமே பேசாமல் உடனே படத்தின் பெயரை வலிமை வையுங்கள் என்று உரிமையை கொடுத்துவிட்டாராம் என்ற தகவலும் வருகிறது. இந்த படத்தில் அஜீத் குமார் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளன.

இதையும் பாருங்க : குடியால் வாழ்க்கையே நாசமாகிடிச்சி.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட இந்தியன் பட நடிகை தற்போதைய நிலை..

- Advertisement -

அஜித் குமார் அவர்கள் பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் அவருடைய எல்லா படத்திலும் ஒரு காட்சியிலாவது அவருடைய பைக் ரேஸ் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்படும். இந்நிலையில் தற்போது வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடந்த ஸ்டன்ட் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் தலயே நடித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து “வலிமை” படத்திலும் ஆக்ஷன் காட்சிகள், அவருடைய பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Image result for kenanya films selvakumar
கென்யா பிலிம்ஸ் நிறுவனர் செல்வகுமார்…
Image
Image

இந்த படத்தில் அஜித் அவர்கள் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ரொம்ப ஸ்லிம்மா மாறி இருக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், அவருடைய லுக் பார்ப்பதற்கு வேற லெவெல்ல இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதோடு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க பல நடிகைகளை தேர்வு செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement