பொதுவாகவே மனிதர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி பல பேர் தவித்து வருகிறார்கள். அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாரபட்சமில்லாமல் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். இது மாதிரியான மக்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய சூழ்நிலையும், உறவினர்கள் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி அனாதையாக ரோட்டில் பரிதவித்து வரும் மக்கள் சாதாரண மக்களாக மட்டும் இல்லாமல் பலர் பிரபலங்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் நடிகைகள் தங்களுடைய கடைசி காலத்தில் எந்த ஒரு ஆதரவும் இன்றி அனாதையாக வாழ்ந்து இறந்து போகிறார்கள்.

அந்த வகையில் ஜனாதிபதி கையால் சிறந்த நடிகை என்ற விருது வாங்கிய ஒரு சிறந்த நடிகைக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அவர் வேற யாரும் இல்லை, பழம்பெரும் நடிகை மாரிக்கன்னு. இவரின் தற்போதைய நிலைமையைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நாடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் மாரிக்கண்ணு. இவரை மாரி முத்து, மாரி கன்னு என்று தான் அழைப்பார்கள். பொதுவாகவே சினிமா உலகம் என்ற ஒன்று நாடகத்துறையில் இருந்து தான் உருவானது.

Advertisement

தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த மாரிக்கன்னு:

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல நடிகர்களும் நாடகத்துறையின் மூலம் தான் சினிமாவுக்குள் நுழைந்தார்கள். அந்த மாதிரி நாடகத்துறையில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாரிக்கண்ணு. இவர் வள்ளி திருமணம், திருவிளையாடல் போன்ற பல கதைகளில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பை பார்ப்பதற்கே மக்கள் கூட்டம் திரண்டு வருவார்களாம். அந்த அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர். இவருடைய சிறந்த நடிப்பிற்காக அப்போதிருந்த ஜனாதிபதி இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதும் தந்திருக்கிறார். இதன் பின் இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். பின் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு பெண் பிறந்தார்.

மாரி கன்னு அவல நிலைமை:

இப்படி சந்தோஷமாக கொடிகட்டி வாழ்ந்த நடிகை மாரிக்கண்ணு தற்போது ரோட்டில் அனாதையாக ஆதரவு இன்றி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் நிலையை அறிந்து பிரபல சேனல் பேட்டி எடுக்க சென்றிருந்தது. அப்போது அங்கிருக்கும் ஊர் மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, இந்த அம்மாவை பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. இவர்கள் இப்படித்தான் ரொம்ப காலமாக இருக்கிறார்கள். இவர்களை சரியான மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்திருந்தால் இவர் குணமாகி இருப்பார். இவர்களுடைய தெருக்கூத்து நாடகங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

Advertisement

மாரி கன்னு குறித்து ஊர் மக்கள் சொன்னது:

அந்த அளவிற்கு அருமையாக நடிப்பார். இப்படிப்பட்ட நடிகைக்கு இந்த நிலைமையா? என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. நாங்களே சாப்பாடு கொடுக்கிறோம். அவர்கள் நம்மள மாதிரி மூன்று வேளை சாப்பாடு அதுவும் நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்றெல்லாம் யோசிக்க மாட்டார். அவருக்கு எப்போ சாப்பிட தோணுகிறதோ அப்ப சாப்பிட்டுவர, தூங்குவார். ரோடு, கோயில்களின் திண்ணைகளில் இருப்பார். அப்படி இருந்தாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். புது துணியை வாங்கி கொடுத்தாலும் நீங்கள் போட்டு சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

Advertisement

உதவும் மக்கள்:

யாரையும் நம்பாதீர்கள் கவனமாக இருங்கள் என்று சொல்லுவார். அவர் கணவர் இறந்த பிறகு தான் இந்த மாதிரி ஆனதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை உண்மை என்பது தெரியவில்லை. அவர் யாரையும் நம்பி போகமாட்டார், எதுவும் வாங்கவும் மாட்டார். மனநிலை சரியில்லை என்றாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கமாட்டார் என்று கூறியிருந்தார்கள். ஜனாதிபதியின் கையில் விருது வாங்கிய நடிகை நடு ரோட்டில் அனாதையாக இருக்கிறார். இவருடைய நிலைமை குறித்த தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் உதவ முன் வந்து இருக்கிறார்கள். பின் இவரை மனநலம் மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement