துளசியை தொடர்ந்து சின்ராசுவும் விலகலா ? – இனி அவருக்கு பதில் இந்த பிரபல நடிகர் தானா ? யார் பாருங்க ?

0
2360
vanathaipola
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் வானத்தைப் போல. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
வானத்தைப் போல மன்யா

சின்ராசு – துளசி :

ஸ்வேதா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்துள்ளார். மேலும், ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். பின் சீரியல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக கலர்ஸ் கனடா சேனலில் தொடரில் நடித்தார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் தெலுங்கு படத்திலும் ஸ்வேதா நடித்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் குறும்படங்கள், ஆல்பம் சாங் எனப் பலவற்றிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் சோசியல் மீடியாவில் உருவாகி இருக்கிறார்கள்.

ஸ்வேதா விலகல் :

இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற ரூமர்ஸ் பரவிக் கொண்டே இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த ஸ்வேதா, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதை நான் உங்களிடம் சொல்லணும் என்று காத்திருந்தேன். ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். அந்த ரூமர்ஸ் இப்போது உண்மையாகி விட்டது. இது தான் என்னுடைய கடைசி நாள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-36.png

யார் இந்த புதிய துளசி:

இனி ரசிகர்கள் என்னை துளசியாக பார்க்க முடியாது. அது மட்டுமில்லாமல் என்னை துளிசியாக ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் நன்றி. இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் ஸ்வேதாவிற்கு பதிலாக மான்யா என்பவர் நடிக்க வந்திருக்கிறார். ஜெமினி தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தெலுங்குத் தொடரான பாக்யரேகா (Bhagyarekha) எனும் தொடரில் நடித்திருக்கிறார்.

இனி இவர் தான் சின்னராசுவா ? :

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியோடு ஸ்வேதாவின் காட்சிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது புதிய துளசியாக மான்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் சின்னராசுவாக நடித்து வந்த தமனும் விலகி இருப்பதாகவும், அவருக்கு பதில் பிரபல நடிகர் ஸ்ரீ கமிட் ஆகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், புதிய துளசி என்ட்ரி கொடுத்ததில் இருந்தே சின்னராசு காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement