‘நாங்களும் அதையே தான் சொல்றோம்’ – தி கேரளா ஸ்டோரி சர்ச்சை குறித்து வானதி ஸ்ரீனிவாசன்.

0
372
Vanathi
- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படம் குறித்த சர்ச்சைக்கு பாஜக எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படம் இந்தியில் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படம்:

திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்களை திரையரங்கின் உள்ளே அனுமதித்து இருந்தார்கள். மேலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சைக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு.

வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:

அந்த சுதந்திரம் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அதை நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை நீதிமன்றம் மறுத்து இருக்கிறது. படங்களை படங்களாகப் பாருங்கள் என்று எத்தனையோ தடவை மாற்றுக்கட்சியினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனால் நாங்களும் அதைத் தான் அவர்களுக்கு சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement