பெற்ற மகனை கழுத்தை பிடித்து நெறித்த வனிதா.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

By Rajkumar · 9/7/2019

பிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக வருவது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே பேசுவேன் இது தான் வனிதாவின் லாஜிக். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை ஸ்டில்.! நேற்றய நிகழ்ச்சியில் இதை கவனிசீங்களா.!

இதற்கு பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்ததோடு அவர் ஆகாஷ் பக்கமே நின்றார். அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=ntbsB4fVYdg

அந்த விடியோவில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறுகிறார். ஆனால், வனிதாவோ 'அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை' என்று கூறிவிட்டு அந்த சிறுவனை இழுத்து பிடித்துக்கொண்டு வைத்தோள்கிறார்.

ஒரு கட்டத்தில் விஜயகுமார் மற்றும் வனிதா அந்த சிறுவனுக்காக சண்டை போடா இறுதியில் வனிதா, அந்த சிறுவனின் கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார். இதனால் அருகில் இருந்த அனைவருமே குழந்தையின் கழுத்தை நெருக்குகிறீர்களே என்று கூறியும் வனிதா அதனை காதில் வாங்காமல் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full