பிக் பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை ஸ்டில்.! நேற்றய நிகழ்ச்சியில் இதை கவனிசீங்களா.!

0
4281
Kamal-Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை போனி கபூரின் கணவர் தயாரித்து வரும் இந்த பாடத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரசிச்சந்திரன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமியும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மாடல் அழகியான அபிராமி பல்வேறு விளம்பர படங்களிலும், வெப் சீரிஸ்சிலும் நடித்துள்ளார். பல்வேறு நேர்காணலில் நிராகரிக்கப்பட்ட பின்னரே இவருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால், நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் தான் அபிராமி யார் என்பதே பலருக்கும் தெரியும்.

இதையும் பாருங்க : இந்த இடத்திலா டாட்டூ குத்துவங்க.! புகைப்படத்தில் முதன் முறை லீக்கான ரகசியம்.! 

- Advertisement -

கடந்த சில வாரத்திற்கு முன்னர் நடந்த ஒரு டாஸ்கின் போது கூட, நேர்கொண்ட பார்வை படம் குறித்து பேசிய அபிராமி, தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றால் அது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது தான். அதிலும் அஜித்துடன் நடித்த அனுபவம் தன்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி, நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படம் அச்சிடபட்ட டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். இதனை கண்டதும் அஜித் ரசிகர்கள் ஒரே குஷி ஆகியுள்ளனர். இருப்பினும் அபிராமி, அஜித் ரசிகர்களை ஈர்க்க இப்படி ஆடை அணிகிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

Advertisement