புருஷன் விட்டுடுட்டு போனா SELF RESPECT இல்லன்னு சொன்ன செருப்பால இல்ல எதால வேணா அடிக்கலாம்-வனிதா ஆதங்கம்

0
461
- Advertisement -

மணிமேகலை-பிரியங்கா விவகாரம் குறித்து நடிகை வனிதா பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சியில் இருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்.

-விளம்பரம்-

அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள்.

- Advertisement -

மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:

இருந்தாலும், சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இதற்கு மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து பண்ணிய வீடியோவில் ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசி இருந்தவர்களை சொம்புகள் என்று மோசமாக பேசி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வனிதா அளித்த பேட்டியில், என்னுடைய படத்திலேயே நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். அதனால் நான், அவர்கள் சொல்வதைக் கேட்க முடியாது. நான்தான் இயக்குனர் என்று பேசுவது ரொம்ப தப்பு.

வனிதா பேட்டி:

அவர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது. ஒருவரை கம்பேர் பண்ணுவது, அவர்களை பற்றி தப்பா பேசுவது தான் தவறான செயல். ஆனால், நீங்கள் பேசவே கூடாது என்று சொல்வது ரொம்ப தப்பான விஷயம். அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். செட்டில் இருக்கிறவங்க எல்லோருமே எனக்கு பழக்கமானவர்கள். ஆனால், இந்த விஷயத்தில் சோசியல் மீடியா ரொம்ப பெருசு பண்ணி அசிங்கப்படுத்தினார்கள். நிறைய பேர் தேவையில்லாமல் உள்ள வந்து ரொம்ப தவறாக பேசுகிறார்கள். அதில் ஒரு விஷயம் எனக்கு பிடிக்கவே இல்லை. மணிமேகலை தன்னுடைய கணவருடன் வாழ்வதால் செல்ஃப் ரெஸ்பெக்ட் உடன் இருக்கிறார் என்றும், ஹஸ்பண்ட் விட்டுட்டு போனதால் பிரியங்கா செல்ப் ரெஸ்பெக்டை விட்டு இருக்கிறார் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரியங்கா குறித்து சொன்னது:

அவர்களை எல்லாம் செருப்பால் இல்லாமல் எதுல வேணாலும் அடிக்கலாம். பிரியங்கா ஹஸ்பன்ட் விட்டுட்டு போகவில்லை. இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ஒரு பெண்ணுடைய கேரக்டரை ரொம்ப தவறாக பேசக்கூடாது. இப்படி எல்லாம் ஒரு பெண்ணை ரொம்ப கேவலமாக பேசும்போது மணிமேகலை என்கரேஜ் செய்யும் விதமாக போட்டு இருக்கும் வீடியோ என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதை நான் மணிமேகலை இடம் நேரடியாக சொல்கிறேன் போனில் சொல்லவில்லை. அவர் மீடியாவில் பேசினதால் நானும் மீடியா முன்பே சொல்கிறேன். மணிமேகலை நீ வளர்ந்து வருகிற பொண்ணு. உனக்கான ஒரு நல்ல லைஃப் இருக்கு.

மணிமேகலைக்கு சொன்ன அட்வைஸ்:

உனக்கு நல்ல கணவர் இருக்கிறார். ஆனால், ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசும் போது நீ ஊக்குவிக்கும் வகையில் வீடியோ போடுவது ரொம்ப தப்பு. பிரியங்காவிற்கு ஆதரவாக இருப்பவர்களை சொம்பு என்று சொல்வதெல்லாம் தேவை இல்லாத செயல். செட்டில் இருப்பவர்கள் அவர்களுடைய தரப்பு நியாயத்தை சொன்னார்கள். அதற்காக நீ சொம்பு என்று அவர்களை கேவலமாக பேசக்கூடாது. இது நல்லா இல்லை. ஏதோ ரெண்டு பெண்கள் ஈகோ சண்டை. அதை அப்படியே விட்டு விடனும், தேவையில்லாமல் பெரிது பண்ண கூடாது. அதேபோல் பிரியங்கா இந்த பிரச்சனையை கண்டு ஓடிப் போயிட்டாங்க என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. அவர் வெளிநாட்டில் வெக்கேஷன்காக போய் இருக்கிறார். இதை அறிந்த பிரியங்கா எனக்கு போன் செய்து ரொம்பவே கதறி அழுதார். மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, என்னால் முடியவில்லை என்று அவள் அழுதாள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement