சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வனிதா குறித்த தகவல்:
இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸஸ் & மிஸஸ் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

வனிதா பேட்டி:
இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜூலை 11ம் தேதி வெளியாகயிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராபர்ட் பற்றி சொன்னது:
அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் காதலன் ராபர்ட் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து வனிதா, சிம்பு- நயன்தாராவிற்கு பிறகு முன்னாள் காதலர்கள் திரையில் சேர்ந்து நடித்தது நானும் ராபர்டும் தான். முன்னாள் காதலனுடன் மீண்டும் நடிப்பது மிகப்பெரிய வலி. இந்த படத்தில் ராபர்ட் எனக்கு தாலி கட்டும் சீன் ஒன்று இருக்கிறது. அந்த சீனை மட்டும் 40 முறை எடுத்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

வனிதா திருமணம்:
இதற்கிடையில் நடிகை வனிதா அவர்கள் நடிகர் ஆகாஷை திருமணம் செய்திருந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்கள். அதற்குப்பின் வனிதா தன்னுடைய குடும்பத்துடன் சண்டை போட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பின் இவர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து இருந்தார். ஆனால், இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பின் இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து இருந்தார். அதற்குப்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துமே விட்டார்கள்.






