நடிகை வனிதா விஜயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இதனிடையே வனிதா நடிகர் ஆகாஷை திருமணம் செய்து இருந்தார். பிறகு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அதன் பிறகு இவர் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார் வனிதா. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். பின் நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வனிதா விஜயகுமார் குறித்த தகவல்:
அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார் வனிதா. அதுமட்டுமில்லாமல் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் வாழ்க்கை மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்கிறார்கள். மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

வனிதா பிறந்தநாள்:
அந்த வகையில் சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த அந்தகன் படத்தில் வனிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தற்போது இவருக்கு 44 வயது தொடங்கி இருக்கிறது. மேலும், தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திலேயே இவர் தன்னுடைய படத்தினுடைய அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

வனிதா அழ காரணம்:
பிரபல ஹோட்டல் ஒன்றில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாள் விழாவில் ராபர்ட் மாஸ்டர், அவருடைய அம்மா, தோழி ஆகியோர் வந்திருந்தார்கள். இவர்களுடன் பாத்திமா பாபு உட்பட சினிமா, டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் நடிகர் விஜயுடன் வனிதா நடித்திருந்த சந்திரலேகா படத்தில் இருந்து அல்லா உன் ஆசைப்படி எல்லாம் நடக்கும் என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடல் வந்த உடன் சில நிமிடங்கள் வனிதா விஜயகுமார் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தற்போது ராபர்ட் மற்றும் வனிதா இணைந்து ‘Mr & Mrs’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்கள்.






