நேர்கொண்ட பார்வைக்கு மோசமான விமர்சனம்.! வரலஷ்மியின் சக்க பதில பாருங்க.!

0
10087
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் பட இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், படத்திற்க்கு யுவன் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணியம் என்பது தற்போது நமக்கு தெரிவந்துள்ளது. பாரதியை போல பெண்களுக்காக போராடும் ஒரு புரட்சி நாயகனாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளதால் சுப்பிரமணிய பாரதியின் பெயரை தான் இப்படி மறைமுகமாக அஜித்திற்கு வைத்துள்ளார்களாம்.

இதையும் பாருங்க : சரவணனுக்கு போன் செய்துள்ள பரணி.! கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.! 

- Advertisement -

தமிழகத்தில் இந்த படம் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் சிங்கப்பூரில் இந்திய நேரப்படி நேற்று (ஆகஸ்ட் 6) காலை 9 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. அதே போல சென்னையிலும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி போடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்த பல்வேறு பத்திரிகையாளர்கள் அஜீத் படங்களில் இது மிக முக்கியமான படம் என்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாடும் விதத்திலும் இன்றைய காலகட்டத்துக்கான அழுத்தமான கருத்தை சொன்ன விதத்திலும் அஜீத்-வினோத் கூட்டணி வென்றிருக்கிறது என்கிறார்கள். ஆனால், பிரபல சினிமா விமர்சகர்களான வலைபேச்சு விமர்சனத்தில் இந்த படம் படு மோசமான படம் என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-


Advertisement