ஐபிஎல் பார்க்க சென்ற வரலக்ஷ்மி.! டீ ஷர்ட்டை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.!

0
993
Varalakshmi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும்மோதியது .

-விளம்பரம்-

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 179 ரன்கள் குவித்து. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 99 ரன்களுக்கு சுரண்டது. இந்த போட்டியில் தோனி அபாரமாக ஆடி இருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் தோனிக்கு கடைசி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் குவிந்தனர்.

- Advertisement -

மேலும், இந்த போட்டியை நேரில் காண பிரபல நடிகை வரலக்ஷ்மியும் வந்திருந்தார். அவர், தோனியை தல என்று குறிப்பிட்டு வாசகம் அடங்கிய டி- ஷர்ட்டை அணிந்து வந்து சென்னை அணி ரசிங்கர்களை உற்சாகபடுத்தினார்.

ஏற்கனவே தல என்றால் அது அஜித் மட்டும் தான் என்று விவாதம் போய் கொண்டிருக்க, தோனியை தல என்று குறிப்பிட்ட டீ ஷர்டை வரலக்ஷ்மி அணிந்துள்ளது தல ரசிகர்களை கொஞ்சம் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் தல பிறந்தநாளான நேற்று இப்படி வரலக்ஷ்மி செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement