தீபாவளி வரை Wait பண்ண முடியாது.! பட்டாசு ரெடி பண்ணுங்க.! சர்க்கார் பற்றி வரலக்ஷ்மி சரத்குமார்

0
742
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் வேலைகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி இந்த படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் ஒன்றை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி , இந்த அற்புதமான வாய்ப்பிற்கு நன்றி. விஜய் சாருடன் நடிப்பது எனது மிகப்பெரிய கனவு, தீபாவளி வரை காத்திருக்க முடியவில்லை. பட்டாச ரெடி பண்ணுங்க என்று மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி சர்கார் படக்குழுவில் பணியாற்றிய கலைஞர்களுடன் “சர்க்கார்” என்று சத்தமாக கூவிக்கொண்டு இந்த படத்தின் நிறைவை கொண்டாடியுள்ளார்.

-விளம்பரம்-

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “சர்கார்” படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் ஏற்க்னவே வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக இந்த மாதமே இந்த படத்தின் சிங்கள் டிராக் மட்டும் வெளியாககூடும் என்பது கூடுதல் தகவல்.

Advertisement