No.1 என்று நிரூபித்தது யார் ? வாரிசு Vs துணிவு படத்தின் முதல் நாள் வசூல் இதோ.

0
642
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடித்து வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படமும். தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியானதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய வந்தது. இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியாகியது.

-விளம்பரம்-

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்கு பிறகு மீதும் நடிகர் அஜித் மற்றும் எச் வினோத் இயக்கத்தில் AK-61 துணிவு திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. எச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்கள் வேட்டை போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றிப்படங்களாக இருந்தது. ட்ரைலர் வெளியான போதிலிருந்தே கொண்டாட்டங்கள் நடக்க தொடக்கி விட்டன. கிட்டத்தட்ட இந்த வாரம் முழுவது திருவிழா போல மக்கள் கூட்டமாக இருந்து வந்தது.

- Advertisement -

இரு நடிகர் படக்குழுவினர் சாரிப்பில் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற , ரசிகர்களின் சாரிப்பில் போஸ்டர் ஓட்டுவது, கோவிலில் பூஜை செய்வது, அஜித் கேட் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது என தடபுடலாக நடந்து வந்தது. மேலும் பெங்களூருவை சேர்ந்த ரசிகர் ஒருவர் 7.35 லட்சம் செலவில் பிரம்மனாட பூ மாலையை அஜித்தின் கட் அவுட்டிற்கு அணிவித்து அழகு பார்த்தார். இது மட்டுமில்லாமல் சில அசம்பாவித சம்பவங்ககளும் நடந்தது.

Ajith

உயிர் பலி :

துணிவு படம் நேற்று தமிழ் நாடு முழுவதும் வெளியாகிய நிலையில் சென்னை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் லாரியின் மீது நடனமாடிக்கொண்டிருக்கும் போது கீழே விழுந்து முதுகுத்தண்டில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியது. இந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு வெளியான துணிவு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

துணிவு வசூல் :

இந்தியாவில் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் துணிவு படம் 26 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்ப்டுகிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரையில் வாரிசு 17ரூபாயும், துணிவு படத்தை பொறுத்தவரையில் 18 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மேலும் ஆந்திராவில் ரூ 2.5 கோடியும், தெலுங்கானாவில் ரூ 3கோடியும், கர்நாடகாவில் ரூ2.5 கோடியும, கேரளாவில் ரூ 1.5 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதர இடங்களில் 50 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளது

varisuthunivu

வாரிசு வசூல் :

துணிவுடன் போட்டி போட்டு வெளியான வாரிசு முதல் நாள் இந்தியாவில் 26 கோடியே 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 கோடி ரூபாயும், கேரளாவில் 3.5 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களில் இருந்து 1 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துணிவு படைத்த விட 50 லட்சம் ருபாய் அதிகமாக வசூல் செய்த்தாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement