தியேட்டர்ல  வாரிசு படத்தை உட்கார்ந்து பார்க்க மாடீங்க – பிரபலம் போட்ட பதிவு. பீஸ்ட் படத்தை நினைவுபடுத்தும் ரசிகர்கள்.

0
325
- Advertisement -

விஜய்யின் வாரிசு படத்தை திரையரங்கில் யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டீர்கள் என்று நடன இயக்குனர் ஜானி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

வாரிசு படம்:

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது. தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஜானி மாஸ்டர் பதிவு:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் மட்டும் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றனர். சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களை பார்த்து கைய அசைத்து விட்டு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் வாரிசு படம் குறித்து ஜானி மாஸ்டர் பதிவிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பதிவில் கூறி இருப்பது:

வாரிசு படத்தில் ஒரு பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். மேலும், வாரிசு படத்தில் பயிற்சி செய்யும் போது எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து, விஜய் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக ஒரு மாசான நடத்தை பார்க்க இருக்கிறீர்கள். திரையரங்கில் நீங்கள் படத்தை உட்கார்ந்து பார்க்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படம் மாதிரி ஆகிவிடாதே என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement