இரண்டு முறை விவகாரத்து ? தற்போது இந்த வயதில் வாரிசு பட நடிகைக்கு 3வது திருமணமா ?

0
1122
jayasudha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி நடித்து கடந்த 11ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படம் அஜித் நடித்துள்ள துணிவு படத்துடன் ஒன்றாக வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் வாரிசா? துணிவா? என்று இருக்கும் நிலையில் துணிவு படம் வங்கி கொள்ளையை பற்றியும் வாரிசு படம் குடும்ப கதையாகவும் உருவாகியுள்ளது உள்ளது.

-விளம்பரம்-

நடிகை ஜெயசுதா :

இந்த நிலையில் பல படங்களுக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட படத்தில் நடித்திருக்கும் விஜய்யின் அம்மாவாக “வாரிசு” படத்தில் நடித்துள்ளவர் பிரபல தெலுங்கு நடிகை ஜெயசுதா. இவர் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1972 ஆண்டு தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் 1973ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அரங்கேற்றம்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

நடித்த படங்கள் :

தமிழ் தொடங்கி, மலையாளம், கண்டனம் என பல மொழி படங்களில் ஜெயசுதா நடித்துள்ளார். பெரும்பாலும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு அம்மா. அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறன் போன்ற நடித்திருக்கிறார். மேலும் ரஜினி கமல் போன்ற நடிகர்களுடன் பட்டிக்காட்டு ராஜா, ஆயிரத்தில் ஒருத்தி, ஒரு நிலவுகள், ராசலீலா, பாண்டியன், தவசி, அலைபாயுதே என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதல் மற்றும் இரண்டாம் திருமணம் :

இந்த நிலையில் நடிகை ஜெய சுதா தயாரிப்பாளர் காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலம் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 1982ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 1985ஆம் ஆண்டு நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகள் ஓன்றாக வாழ்ந்து வந்த நிதின் கபூர் கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

மகன் திருமணம் :

கணவர் மறைந்ததால் மனமுடைந்த செய சுதா சில காலங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் தான் இவரது மூத்த மகன் நிஹாருக்கு திருமணம் செய்து வைத்தனர். சினிமாவில் கடந்த 50ஆடுகளாக நடித்து வரும் நடிகை ஜெயசுதாவிற்கு தற்போது 64 வயதாகிறது. இந்த நிலையில் தான் இவர் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாக்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மூன்றாவது திருமணமா?:

மூன்றாவதாக திருமணம் செய்ய இருக்கும் நபர் தொழிலதிபர் என்றும் அவருடன் நடிகை ஜெயசுதா பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளார் என்றும் கூறிவருகின்றனர். மேலும் கடந்த காலங்களில் ஓய்வெடுக்க அமெரிக்க சென்ற ஜெயசுதா அங்குள்ள தொழிலதிவர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சினிமா வட்டாரங்களில் பாரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் உண்மை தண்மை குறித்து நடிகை ஜெயசுதா எந்த அறிவிப்பையும் இன்னமும் வெளியிடவில்லை.

Advertisement