தமிழ் நாட்ல அஜித்த விட விஜய் தான No.1,தியேட்டர் குடுக்க மாட்றாங்க – வாரிசு தயாரிப்பாளரால் கலேபரமான ட்விட்டர்.

0
492
- Advertisement -

வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்கங்கள் வேண்டும் என்று வலியுறுத்த உதயநிதி ஸ்டாலினை சந்திக்க தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால், வசூலில் சாதனை செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதனை அடுத்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது.

படத்தின் பாடல்:

இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது. மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ்:

மேலும், படத்திற்கான வியாபாரம் மற்றும் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துணிவு படத்திற்கு தான் திரையரங்கங்கள் அதிகமாக கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தில் ராஜு அளித்த பேட்டி:

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மீடியாவிற்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார். இது வியாபாரம். இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்கம் என்பது ஏற்க முடியாது. இது குறித்து பேச தான் நான் சென்னைக்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை அடுத்து இவர் இன்று காலை சென்னைக்கு வந்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement