விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

Advertisement

தளபதி 66 படம்:

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது அடுத்து கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது.

Advertisement

தளபதி 67 படம்:

இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. அதற்கான போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். அதற்கான அறிவுப்பு எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

Advertisement

தில் ராஜு குழந்தை:

அவர் வேற யாரும் இல்லைங்க, தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தான். இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு மொழியில் பல முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement