இன்னும் பாட்டு கூட வரல, வாரிசு பட Promoவையே வச்சி செய்யும் நெட்டிசன்கள் – வைரலாகும் memes இதோ.

0
575
vamsi
- Advertisement -

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலை நெட்டிசன்கள் கேலி செய்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

முதல் பாடல் டீசர் :

மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடல் குறித்த டீசர் வெளியாகி இருக்கிறது. அந்த பாடல் ‘ரஞ்சிதமே’ என்று துவங்குகிறது. அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் 30 வினாடிகள் மட்டுமே இந்த பாடல் வந்திருக்கிறது.

-விளம்பரம்-

கேலிக்குள்ளான பாடல்:

இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த முழு பாடலும் வரும் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, விஜயின் படம் என்றாலே அவருடைய நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது வாரிசு படத்தின் முதல் சிங்களான ரஞ்சிதமே என்ற பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே அதிருப்தி அடைந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

விமர்சிக்கும் ரசிகர்கள்:

பாடல் வரிகளும் சரியில்லை, விஜயின் நடன ஸ்டெப்புகள் ஒன்று கூட நன்றாக இல்லை என்றெல்லாம் கேலிக் உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலின் நடனம் நன்றாக இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்திருந்தார். தற்போதும் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும், பாடல் வெளியான பிறகு தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வார்கள். ஆனால், ப்ரோமோ வீடியோவை பார்த்து ட்ரோல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement